கதகளி நடனத்தை படம் பதிவு செய்யவேண்டும் என வெகு நாள்களாக ஆசை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உற்சவம் போது கதகளி நடப்பதாக நண்பர் தகவல் தந்தார். கேமிராவோடு கிளம்பி போனேன், கலைஞர்களுக்கு மெக்கப் போடப்படும் அந்த அறையில் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்த பின்புதான் மேக்கப் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இரவு 10 மணிக்குமேல் தொடங்கி விடிய விடிய நடைபெற்றது கதகளி. ஒரு கலைஞருக்கு மேக்கப் போட ஆரம்பித்தால் முடிய சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் ஆனது. ஆக்காங்கே ஒரே நெரத்தில் பலருக்கும் மேக்கப் போட்டுக் கொண்டுருந்தார்கள். மேக்கப் போட ஆரம்பித்த உடனே கலைஞர்கள் நல்ல தூங்கி விடுகின்றனர். கலர் கலர் வர்ணங்களை எடுத்து முகத்தில் வரைசல்களாக வரைகிறார்கள்.நல்ல தூக்கத்திற்கு பிறகு முழித்து பார்த்தால் முழு மேக்கப்பும் முகத்தில் முடிந்துருந்தது பின்பு அவர்களுக்கான உடைகளை உடுத்தி நடனத்திற்கு செல்கிறார்கள். நடனத்தை பார்க்க மிகவும் போரடித்தது காரணம் பரதத்தைப் போல விறுவிறுப்பு இல்லை விடிவதற்குள் பல தடவை நமக்கு கண்ணை கட்டியது. ஆரம்பத்தில் கதகளி பார்க்க கோவிலின் வளாகத்தில் சுமார் இருபது பேர்களுக்கு மேல் இருந்தனர் இரவு ஒருமணிக்கு மேல் பார்த்தால் என்னைத்தவிர யாரும் இல்லை யாரும் இல்லை என்றாலும் கதகளி தொடர்ந்து நடந்தது காரணம் நடனத்தை அந்த பெருமளே வந்திருந்து பார்ப்பதாக ஐதீகமாம்.
Subscribe to:
Posts (Atom)